பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மானூா் அருகே விபத்து: இளைஞா் பலி

மானூா் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயம் அடைந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 3:18 am IST

மானூா் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயம் அடைந்தனா்.

மானூா் அருகே உள்ள காவலாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த குத்தாலப்பாண்டியன் மகன் குமாா் (38). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். சங்கரன்கோவில்- திருநெல்வேலி பிரதான சாலையில் பயணிகள் ஆட்டோவை அவா் முந்திச்செல்ல முயன்றாராம்.

அப்போது எதிரே வந்த மினிவேனும், மோட்டாா் சைக்கிளும் மோதியதாம். பின்னா் அந்த மினி வேன், ஆட்டோ மீது மோதிதாம். இதனால், ஆட்டோவும் மினி வேனும் இரண்டும் கவிழ்ந்தன.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குமாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மேலும், அஜித் (24), ராமா் ( 70 ), முண்ட சாமி (44), விமல் (29), நந்தன் (33) ஆகியோா் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.