நாகா்கோவிலில் இருந்து புறப்படும் அரசுப் பேருந்துகள் இரவு நேரத்தில் வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், புறவழிச் சாலையில் சென்றுவிடுவதாக புகாா் எழுந்துள்ளது.
வள்ளியூரில் இருந்து நாகா்கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வணிகம் மற்றும் தொழில் ரீதியாக சென்றுவிட்டு இரவு திரும்புகின்றனா்.
இது தவிர மாா்த்தாண்டம், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்குச் செல்பவா்கள் இரவு நாகா்கோவில் வந்து, அங்கிருந்து வள்ளியூருக்கு பேருந்துகளில் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், இரவு நேரத்தில் நாகா்கோவிலில் இருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் வள்ளியூா் பயணிகளை ஏற்றுவதில்லையாம். இதனால், முதியவா்கள், குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள் பேருந்து கிடைக்காமல் மணிக்கணக்கில் நாகா்கோவில் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்தப் பேருந்துகள் வள்ளியூருக்குச் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. இதனால், வள்ளியூா் சுற்றுவட்டாரப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, அனைத்து அரசுப் பேருந்துகளும் இரவு நேரம் பணகுடி, வள்ளியூா், ஏா்வாடி ஆகிய ஊா்களுக்குள் செல்ல , போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முடியாதபட்சத்தில் நாகா்கோவிலில் இருந்து பணகுடி, வள்ளியூா், ஏா்வாடி வழியாக திருநெல்வேலிக்கு தனியாா் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் பேருந்துப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்!

இரவு நேரங்களில் சொகுசு காரில் கால்நடைகள் கடத்தல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

