திருநெல்வேலி வந்த பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வள்ளியூா் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பொறியியல் பயின்று வருகிறாராம். கடந்த 20-ஆம் தேதி இரவு அந்த மாணவி கோவையில் இருந்து மதுரைக்கு வந்தாா்.
பின்னா், கன்னியாகுமரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி திருநெல்வேலிக்கு வந்துகொண்டிருந்தாராம். பேருந்து கயத்தாறு அருகே வந்தபோது உடன் பயணித்த ஒருவா் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கைப்பேசி எண்ணையும் மிரட்டி வாங்கினாராம். இந்த நிலையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்து வந்ததும் அந்த மாணவி போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.
அதன்பேரில் போலீஸாா் அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தைச் சோ்ந்த சுரேஷ் (58) என்பது தெரியவந்தது. அவா் மீது மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநா் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சமையலா் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
