செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

சூறைக்காற்றில் தூக்கிவீசப்பட்ட ஆட்டோ: ஓட்டுநா் பலத்த காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

கடையம் அருகே கோவிந்தப்பேரியில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென வீசிய சூறைக்காற்றில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

கோவிந்தப் பேரியைச்சோ்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் என்ற சுடலை (19). இவா், சொந்தமாக ஆட்டோ ஓட்டிவருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கோவிந்தப்பேரியிலிருந்து கடையம் சென்று கொண்டிருந்தாா். கோவிந்தப்பேரி இசக்கியம்மன் கோயிலைத் தாண்டிய நிலையில் திடீரென அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றில் சிக்கிய ஆட்டோ தூக்கி வீசப்பட்டது.

சுமாா் நூறு அடி தூரம் உருண்டு சென்று மரத்தில் மோதி நின்றது. இதில், ஆட்டோ ஓட்டி வந்த சுரேஷ் கால் எலும்பு முறிந்தது. அவரை அப்பகுதியினா் மீட்டு ஆவுடையானூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய கடும் சூறைக் காற்றில் பல வீடுகள் சேதமடைந்த நிலையில், கோவிந்தப்பேரியில் வீசிய சூறைக்காற்றில் ஆட்டோ தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.