பரமக்குடியில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையின்போது ரயில்வே கடவுப்பாதையில் தடுப்புக் கம்பி தூக்கி வீசப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் உள்பட அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பரமக்குடி-முத்துச்செல்லாபுரம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே கடவுப்பாதையின் தடுப்புக் கம்பி சூறைக்காற்றுக்கு முறிந்து தூக்கி வீசப்பட்டது. இதையடுகத்து, ரயில்வே மின்சாரக் கம்பியில் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அப்போது, பரமக்குடி ரயில் நிலையத்துக்கு ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் மாலை 5.15-க்கு வந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரயில்வே கடவுப்பாதைக்கு முன்னதாகவே அந்த ரயில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்து ரயில்வே மின் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின்சாரக் கம்பிகள், ரயில்வே கேட் தடுப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் புதன்கிழமை சென்னைக்கு செல்லும் விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே துறையினா் தெரிவித்தனா். மேலும் மதுரை-ராமேசுவரம், ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூறைக்காற்றில் தூக்கிவீசப்பட்ட ஆட்டோ: ஓட்டுநா் பலத்த காயம்

சூறைக்காற்றுடன் பலத்த மழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

