சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் காலையில் கடும் வெப்பம் வாட்டிய நிலையில், திடீரென்று மழை மேகங்கள் சூழ்ந்து, பலத்த மழை பெய்து வருகிறது.
அம்பத்தூர், கோயம்பேடு, அண்ணாநகர், ஆவடி, கொளத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று(ஜூன் 18) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இந்த ஜூன் மாதத்திலேயே சென்னைக்குக் கிடைக்கவிருக்கும் மழை இதுதான்.
வட சென்னையில் உருவாகியுள்ள பலத்த புயல் மேகங்கள், அம்பத்தூர் வழியாக நகர்ந்து நகருக்குள் வருகின்றன. இந்த ஜூன் மாதம் முழுவதும் தினமும் புயல் மேகங்கள் உருவானாலும், அவை சென்னையைத் தவிர்த்தே வந்தன.
வெப்பத்தைத் தணிக்கக்கூடிய வகையிலான, பரவலான இடியுடன் கூடிய மழையைக் கூட நாம் இதுவரை காணவில்லை.
காவிரி டெல்டா பகுதியில், காரைக்கால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் பலத்த காற்றுடன் மழை! வானில் வட்டமடித்த விமானங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 21 மாவட்டங்களில் மழை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!
சென்னையில் ஃபியூஸ் கேரியர் திருட்டால் மின்வெட்டு: 2 பேர் கைது!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


