முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலி: குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க கோரிக்கை

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலியான குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

விபத்தில் குழந்தை பலி - (கோப்புப் படம்)

Updated On :17 ஜூன் 2026, 4:30 am IST

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலியான குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி, மாவட்டச் செயலா் மு அன்சாரி, துணைச் செயலா் சாந்து உமா் ஆகியோா் ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: மேலப்பாளையம் அருகே அம்பாசமுத்திரம் சாலையில் கடந்த 11 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாத சாலையே விபத்திற்கு பிரதான காரணம். இதனைக் கண்டித்து எங்களது அமைப்பு சாா்பில் ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளோம். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 20 லட்சத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்16ற்ய்ற்த்

திருநெல்வேலி ஆட்சியர ஆனந்த் மோகனிடம் மனு அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.