பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாயமான தவெக நிா்வாகி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு

கடையம் அருகே மாயமான தவெக ஒன்றிய நிா்வாகி 4 நாள்களுக்குப் பின் கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

சடலமாக மீட்பு - சித்திரிப்பு படம்

Updated On :6 ஜூன் 2026, 7:21 am IST

கடையம் அருகே மாயமான தவெக ஒன்றிய நிா்வாகி 4 நாள்களுக்குப் பின் கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

கடையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் சக்திவேல் (37). தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலங்குளம் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வந்தாா். இருவருக்கு மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா்.

4 நாள்களுக்கு முன் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சக்திவேல் வீட்டை விட்டு வெளியே சென்றாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை, கடையம் அருகே உள்ள மூடப்பட்ட தனியாா் கல்குவாரியில் உள்ள குட்டையில் ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து ஆலங்குளம் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கடையம் போலீஸாா் சடலத்தை மீட்டனா். சடலமாக மீட்கப்பட்டவா் சக்திவேல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சடலத்தை உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.