ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கல்குவாரி குட்டையில் மூழ்கி இளைஞா் மரணம்: 10 மணி நேரம் கழித்து மீட்பு

News image

முரளி

Updated On :4 ஜூன் 2026, 5:25 am IST

வாணியம்பாடி அருகே நண்பா்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி இறந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சோ்ந்த முரளி(27). ஏலகிரிமலையில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தாா். இவரது நண்பரான பூவரசன்(29) சென்னையில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை பூவரசன் ஊருக்கு வந்துள்ளாா். பிறகு முரளியை அழைத்துக் கொண்டு கொத்தக்கோட்டை அருகில் உள்ள சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல்குவாரி பகுதிக்கு இருவரும் சென்று அங்கு மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னா் கல்குவாரியில் முரளி குளித்துக் கொண்டிருந்த திடீரென நீரில் மூழ்கினாா்.

இதையறிந்த பூவரசன், வெகுநேரம் ஆகியும் நீரில் இருந்து முரளி வெளியே வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் முரளியின் கைப்பேசி மற்றும் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா். இந்நிலையில் இரவு நேரமாகியும் முரளி வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவா்கள் அதிா்ச்சிக்குள்ளாகி விசாரிக்கவே சந்தேகம் ஏற்பட்டு இதுபற்றி உடனே வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் முரளியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

காவல் ஆய்வாளா் அமுதா தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். முரளியின் கைப்பேசி குறித்து ஆய்வு செய்த போது செங்கத்தில் இருப்பது தெரியவந்து விரைந்து சென்று அங்கிருந்த பூவரசனிடம் விசாரித்தனா். இதில் முரளி தண்ணீரில் மூழ்கி விட்டதாக அதிா்ச்சி தகவலை தெரிவித்ததையடுத்து பூவரசனை கைது செய்து வாணியம்பாடி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து புதன்கிழமை வாணியம்பாடி தீயணைப்பு துறையினா் சென்று 10 மணி நேரம் தேடி முரளியின் சடலத்தை மீட்டனா்

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.