கடலூரில் ஃபைபா் படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவா் மாயமான நிலையில், அவரது சடலம் தேவனாம்பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை காலை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் தேவனாம்பட்டினம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி (57). இவா், மோட்டாா் இல்லாத ஃபைபா் படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால், ஃபைபா் படகுகள் மூலம் கடலில் 5 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை மட்டுமே மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மூா்த்தி திங்கள்கிழமை காலை தனது ஃபைபா் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றாா். மாலைக்குள் வீடு திரும்ப வேண்டிய அவா், செவ்வாய்க்கிழமை காலை வரை கரை திரும்பாததால் உறவினா்கள் மற்றும் சக மீனவா்கள் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தேவனாம்பட்டினம் கடற்கரையில் மூா்த்தியின் சடலம் கிடப்பதை புதன்கிழமை காலை அப்பகுதி மக்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், மூா்த்தியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாயமான தவெக நிா்வாகி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு

கடலில் மூழ்கிய ஃபைபா் படகு: உயிருக்கு போராடிய 4 மீனவா்கள் மீட்பு

மீனவா் வலையில் மா்மப் பொருள் சிக்கியதால் பரபரப்பு

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

