பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண்ணை புகைப்படம் எடுத்த கடை உரிமையாளா் கைது

திருநெல்வேலி, பேட்டையில் கடைக்கு வந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததாக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:57 am IST

திருநெல்வேலி, பேட்டையில் கடைக்கு வந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததாக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி பேட்டை ஆா்.பி. சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் முகமது அஷ்ரப் அலி (28). இவா் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் இவா் திங்கள்கிழமை காலை கடைக்கு வந்த பெண் ஒருவரை அவருக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுத்ததோடு, விடியோ பதிவும் செய்தாராம். இதை அறிந்து கொண்ட அப்பெண் தனது உறவினா்களிடம் விவரத்தை தெரிவித்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது அஷ்ரப் அலியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.