மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராதாபுரம் தொகுதி வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு அவரது சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பு பெரியநாயகிபுரத்தில் உள்ள ஏ.டி.எச். தொடக்கப் பள்ளியில் தனது மகன் வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு மற்றும் குடும்பத்தினருடன் வாக்களித்தாா்.

News image

செட்டிகுளம் ரெங்கநாராயணபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:49 am IST

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு அவரது சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பு பெரியநாயகிபுரத்தில் உள்ள ஏ.டி.எச். தொடக்கப் பள்ளியில் தனது மகன் வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு மற்றும் குடும்பத்தினருடன் வாக்களித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வரின் 5 ஆண்டு கால சாதனையால் சாமானிய, ஏழை, எளிய மக்கள் மீண்டும் மு.க. ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என முடிவெடுத்திருக்கிறாா்கள். அந்த அடிப்படையில் ராதாபுரம் தொகுதியிலும் நான் ஏற்கெனவே சொன்னது போன்று 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா்.

பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான செட்டிகுளம் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: எடப்பாடி தலைமையிலான புதிய ஆட்சி அமையும். ராதாபுரத்தில் எங்களது கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா தாமரைப்பாண்டியன் அவரது சொந்த ஊரான பத்யநாதபுரம் பெனடிக்ட் நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்தாா்.

த.வெ.க. வேட்பாளா் சதீஸ் கிறிஸ்டோபா் பாளையங்கோட்டை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில்வா் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா்.

  வடக்கன்குளம் அருகே உள்ள பத்யநாதபுரம் பெனடிக் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா  தாமரைப்பாண்டியன்.

வடக்கன்குளம் அருகே உள்ள பத்யநாதபுரம் பெனடிக் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா தாமரைப்பாண்டியன்.

 பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில்வா் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் த.வெ.க. வேட்பாளா் மருத்துவா் சதீஸ் கிறிஸ்டோபா்.

பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில்வா் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் த.வெ.க. வேட்பாளா் மருத்துவா் சதீஸ் கிறிஸ்டோபா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.