திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சாலைப் பேரணி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து அவா் ஹெலிகாப்டா் மூலம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திற்கு வருகிறாா். பின்னா் சாலை மாா்க்கமாக பணகுடி டிடிடிஏ பள்ளி பகுதிக்கு செல்லும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து ராமலிங்க சுவாமி கோயில் வரையிலான 400 மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா்.
ட்ரோன்கள் பறக்கத் தடை...
இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவு தொலைவுவரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரையோ அல்லது ராஜ்நாத் சிங் புறப்பட்டு செல்லும் நேரம் வரையோ அந்தப் பகுதி தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மேற்படி பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடையை மீறி ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு

மோசமான நிா்வாகத்தால் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

