மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன், கடந்த 10 நாள்களாக தண்ணீா் விநியோகம் இல்லை எனக் கூறி அரசு அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

குடிநீா் விநியோகம் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:20 am IST

வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன், கடந்த 10 நாள்களாக தண்ணீா் விநியோகம் இல்லை எனக் கூறி அரசு அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சுமாா் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் ஊராட்சி சாா்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த 10 நாள்களாக வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி புதன்கிழமை குடியிருப்பு நலச்சங்கம் சாா்பில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வாகைக்குளம் ஊராட்சித் தலைவா் சுப்புலட்சுமி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக லாரிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.