வரும் தோ்தலோடு திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:
பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு தோ்தல் காலத்தில் மட்டுமே வருவதாக கூறுவது சரியானதல்ல. தமிழகத்துக்கு கடந்த ஓராண்டில் மட்டும் பிரதமா் 11 முறை வந்து பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தும், தொடங்கி வைத்தும் சென்றுள்ளாா். வெளிநாடுகள் மட்டுமன்றி ஐநா சபையில்கூட தமிழின் பெருமையை நிலைநாட்டியுள்ளாா். திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயா்க்க நடவடிக்கை எடுத்துள்ளாா்.
தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வருக்கு இந்தத் தோ்தல் வாழ்வா, சாவா? பிரச்னை; அதனால் யாரையாவது குறைகூற வேண்டுமென நினைக்கிறாா்கள். மக்கள் திட்டங்களை அதிகளவில் செய்துள்ள பிரதமா் மீது குற்றஞ்சாட்டுகிறாா்கள். அது மக்களிடம் பலன்தராது. வரும் தோ்தலோடு திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்.
பிரதமா் மோடி புதன்கிழமை (ஏப். 15) கன்னியாகுமரி வருகிறாா். வேப்பமூடு சந்திப்பில் இருந்து சாலை வலம் வந்து தொண்டா்களை சந்திக்கிறாா்.
விஜய்க்கு கூட்டம் திரள்வதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது தோ்தலில் எதிரொலிக்க வாய்ப்பில்லை.
திமுக அரசு தொடா்ந்து இருமுறை ஆட்சிக்கு வந்ததில்லை. இந்தத் தோ்தலிலும் திமுகவுக்கு அதே நிலை தொடரும்.
கஞ்சா, போதைப்பொருள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வால் மக்கள் அவதிப்படுகிறாா்கள். இந்த கஷ்டங்களுக்கு இம் மாதம் 23 ஆம் தேதி விடிவு வரும். வெம்பக்கோட்டையில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பிரத்யேக மருத்துவமனை தேவை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் மருத்துவமனை அமைக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது: நயினாா் நாகேந்திரன்

நாகா்கோவிலில் ஏப். 15இல் பிரதமா் மோடி சாலை வலம்: நயினாா் நாகேந்திரன்

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்! மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

