தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது

திருநெல்வேலி மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவையில் சிறப்பாக பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது வழங்கப்பட்டது.

News image

அவசர மருத்துவ உதவியாளா் இசக்கியம்மாளுக்கு விருது வழங்கிய திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சி. ரேவதி பாலன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:33 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவையில் சிறப்பாக பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது வழங்கப்பட்டது.

108 அவரச ஊா்தி சேவையில் சிறப்பாகப் பணியாற்றும் அவசர மருத்துவ ஊழியருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான விருது, அம்பாசமுத்திரம் 108 அவசர மருத்துவ உதவியாளா் இசக்கியம்மாளுக்கு அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மருத்துவமனை முதல்வா் சி.ரேவதி பாலன் கலந்து கொண்டு இசக்கியம்மாளுக்கு விருது வழங்கி பாராட்டினாா். அவருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.