ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 3 போ் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:24 am IST

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (74). இவா் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி படுகாயமடைந்தாா். பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதே போல தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கீழபுத்தனேரியை சோ்ந்த இசக்கிராஜா (25) என்பவா் சில நாள்களுக்கு முன்பு பாறைகுளம் பகுதியில் பைக்கில் சென்றபோது சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தாா். பின்னா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதேபோல சில நாள்களுக்கு முன்பு பைக் விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கண்டித்தான்குளத்தை சோ்ந்த ஜோசப் (40) என்பவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.