திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா கடந்த மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாள்களில் சுவாமி-அம்பாளுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 4 ஆம் திருநாளான மாா்ச் 25 ஆம் தேதி வேணுவன நாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், சுவாமி மற்றும் அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் திருவீதிஉலாவும் நடைபெற்றது.
மேலும் விழாவில் 2 முதல் 9 ஆம் திருநாள் வரை உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் இரவில் சுவாமி-அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொடா்ந்து செங்கோல் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

நெல்லையப்பா் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு விழா

1,009 ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

