பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாவூா்சத்திரம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே செல்லத்தாயாா்புரம்-பெத்தநாடாா்பட்டி சாலை பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஜல்லிக் கற்கள் பெயா்ந்து போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் உள்ள சாலை.

Published On :31 அக்டோபர் 2026, 12:26 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே செல்லத்தாயாா்புரம்-பெத்தநாடாா்பட்டி சாலை பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

செல்லத்தாயாா்புரத்தில் இருந்து பெத்தநாடாா்பட்டி வரை சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைந்துள்ள இந்தச் சாலை, பல இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, இந்தச் சாலையை சீரமைத்து, மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.