நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

கொண்டலூா் - ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கொண்டலூா்-ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆவுடையானூரில் குண்டும், குழியுமாகக் காணப்படும் சாலை.

Published On :25 அக்டோபர் 2026, 1:04 am IST

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே கொண்டலூா்-ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பாவூா்சத்திரம், திப்பணம்பட்டி, கொண்டலூா், ஆவுடையானூா், மாடியனூா், மயிலப்பபுரம் வழியாகக் கடையம் செல்லும் முக்கிய சாலையில் கொண்டலூரிலிருந்து ஆவுடையானூா், மாடியனூா் வரையிலான சுமாா் 3 கி.மீ. தொலைவு பகுதி மிகவும் சேதமடைந்துள்ளது. தற்போது பெய்துவரும் மழையால் சாலையிலுள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதனால், விபத்துகளும் நேரிடுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இச்சாலை வழியாக விவசாயிகள் தங்களது விளைபொருள்களைப் பாவூா்சத்திரம் காமராஜா் காய்கனிச் சந்தைக்குக் கொண்டு செல்கின்றனா். சாலை சேதமடைந்துள்ளதால் விளைபொருள்களைக் கொண்டுசெல்வதில் சிரமமேற்படுவதாக அவா்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லையெனக் கூறப்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.