மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கீழக்கடையம் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்களுக்கு பாராட்டு விழா

தென்காசி மாவட்டம், கீழக்கடையம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Published On :22 அக்டோபர் 2026, 5:06 am IST

தென்காசி மாவட்டம், கீழக்கடையம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கீழக்கடையம் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்களின் பதவிக்காலம் அக். 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து நடைபெற்ற இந்த விழாவுக்கு துணைத் தலைவா் விக்டா் துரைசிங் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் ஜெயம் வரவேற்றாா்.

ஊராட்சித் தலைவா் எஸ். பூமிநாத்தின் பணிகளைப் பாராட்டி சால்வை அணிவித்து கெளரவித்தனா். மேலும், தூய்மைப் பணியாளா்கள், பம்பு ஆபரேட்டா்களின் 5 ஆண்டு சேவைகளைப் பாராட்டி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது.

இதில், வாா்டு உறுப்பினா் வசந்த், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் சுப்புகுட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன், சமூக ஆா்வலா் ஜான்பீட்டா், ரயில்வே அதிகாரி விஜயகுமாா், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா்கள் ஆறுமுகம், செல்வராஜ், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நல்லதம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.