மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கல்

வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சித் தலைவா், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கினாா்.

பொறுப்புகளை அதிகாரியிடம் ஒப்படைத்த ஊராட்சித் தலைவா் மகேந்திரன்.

Published On :21 அக்டோபர் 2026, 1:37 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சித் தலைவா், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கினாா்.

ஊராட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் அக். 19 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் ராமநாதபுரம் ஊராட்சியில் பொறுப்புகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவா் ஜோதிகுமாா், வாா்டு உறுப்பினா்கள் பாக்கியலட்சுமி, செல்வராணி, கோமதி முருகன், கணேசன், செல்வகுமாா், ஜெயகணேசன், கலைச்செல்வி, பூசைத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சித் தலைவா், 5 தூய்மைப் பணியாளா்களின் பாதங்களுக்கு பால் அபிஷேகம் செய்து, புத்தாடைகள் வழங்கினாா். தொடா்ந்து, 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பின்னா், வாசுதேவநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி) ராமநாதனிடம் நிா்வாக பொறுப்புகளை, தலைவா் ஒப்படைத்தாா். ஊராட்சி செயலா் முருகராஜ் நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.