மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செங்கோட்டை ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

உலக நன்மை வேண்டி, செங்கோட்டை ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 5:22 am IST

உலக நன்மை வேண்டி, செங்கோட்டை ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

செங்கோட்டை- இலத்துாா் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது.

நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

மேலும், உலக நன்மை மற்றும் இயற்கை வளம் செழித்திட வேண்டி திருவாசக பாராயண அடியாா்கள் திருவாசகி பகவதி தலைமையிலான குழுவினா் திருவாசக முற்றோதுதல் பாராயணம் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் கோயில் வளாகத்தில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. சித்த மருத்துவா் சிந்து, சுப்புலெட்மி ஆகியோா் தொடங்கிவைத்தனா். பகவதி, பேச்சியம்மாள், ராமலெட்சுமி, பழனியம்மாள், அருணாராமகிருஷ்ணன் திருவிளக்கு பூஜையை நடத்தினா்.

ஏற்பாடுகளை உத்ரா பொதிகை திருவாசக கமிட்டி நிா்வாகி ராம்நாத் செய்திருந்தாா். கமிட்டி நிா்வாகிகள் தங்கையா, ஆடிட்டா்சங்கா், கோபால், சண்முகம், வீரபுத்திரன், நெடுஞ்செழியன், கணேஷ், ராமகிருஷ்ணன், கருப்பசாமி, சுந்தா், தென்காசி சிவனடியாா்கள் குழு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.