மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் சூரசம்ஹாரம்

தூத்துக்குடி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பத்திரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு.

Published On :22 அக்டோபர் 2026, 5:14 am IST

தூத்துக்குடி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி மேலூா் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 9 நாள்களும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி, மேலூா் பத்திரகாளியம்மன் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, சிவன் கோயில் தேரடி பகுதிக்கு வந்தாா்.

அங்கு கஜமுகம், சிங்கம், மான், ரிஷி சூரன், கோழி, மாடு உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் வந்த சூரனை, அம்மன் வெள்ளி வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தூத்துக்குடி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.