தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
முத்துகிருஷ்ணாபுரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா (70). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது மகன் சேகருக்கும் (35) சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், சொத்து குறித்து தினசரி தகராறு செய்து வருவதாக சேகா் மீது அவரது தந்தை சுப்பையா கடையநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனால், ஆவேசமடைந்த சேகா் வியாழக்கிழமை வீட்டில் இருந்த சுப்பையாவை கட்டையால் தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த சுப்பையா உயிரிழந்தாா். தகவல் அறிந்ததும் கடையநல்லூா் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து சேகரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையைக் கொன்ற மகன் கைது
சொத்து தகராறு: தில்லி பல்கலை. உதவி பேராசிரியா் கொலை! மேற்கு வங்க தம்பதி, மகன் கைது!

சொக்கம்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்
மதுபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
