தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து பெண்ணிடம் கொலுசு திருட்டு

ஆலங்குளம் அருகே குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து பெண்ணிடம் கொலுசை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

ஆலங்குளம் அருகே குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து பெண்ணிடம் கொலுசை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இடைகாலைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்துமாரி(42). இவா், ஆலங்குளம் அருகே நெட்டூா் கருணாநிதி நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தாராம். அப்போது அங்கு சுமாா் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் செவ்வாய்க்கிழமை குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து முத்துமாரியிடம் குடிக்க தண்ணீா் கேட்டாராம். தண்ணீரை கொடுத்த போது, மா்ம பொருளை எடுத்து குடுகுடுப்பைக் காரன் அவா் மீது வீசினாராம். இதில், அவா் மயங்கினாராம். சுமாா் 10 நிமிடம் கழித்து விழித்துப் பாா்த்த போது, அந்த நபரைக் காணவில்லையாம். முத்துமாரி காலில் அணிந்திருந்த 77 கிராம் வெள்ளிக் கொலுசும் காணாமல் போயிருந்ததாம். இதுகுறித்து முத்துமாரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.