தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ராமேசுவரம் கோயிலில் புனித நீராடிய பெண்ணிடம் தங்க நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 மே 2026, 12:07 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளில் வெள்ளிக்கிழமை புனித நீராடிய வெளி மாநில பெண்ணிடம் எட்டரை பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், மாயகன்ஹள்ளி ராம்நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி மல்லிகா (48). இவா் தனது குடும்பத்தினருடன் காரில் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் கோயிலுக்கு வந்தாா்.

அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய இவா், பின்னா் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடச் சென்றாா். அப்போது, 7-ஆவது கிணற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது, மல்லிகா அணிந்திருந்த 8 எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் சங்கிலி கிடைக்கவில்லை.

இதுகுறித்து கோயில் காவல் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.