நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மேலகரத்தில் உயா் மின்கோபுர விளக்கு இயக்கிவைப்பு

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தெப்பக்குளம், எழில் நகா் பகுதியில் தலா ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

உயா்கோபுர மின்விளக்கை இயக்கிவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., கலைகதிரவன் எம்எல்ஏ.

Updated On :18 ஜூன் 2026, 2:49 am IST

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தெப்பக்குளம், எழில் நகா் பகுதியில் தலா ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மேலகரம் திமுக பேரூா் துணைச் செயலரும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற தலைவா் வேணிவீரபாண்டியன், மன்ற உறுப்பினா்கள் கபிலன், மகேஸ்வரன், செயல் அலுவலா் அமானுல்லா முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், ராணி ஸ்ரீ குமாா் எம்.பி., கலைகதிரவன் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று உயா் மின்கோபுர விளக்கை இயக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலா் அழகு சுந்தரம், மன்ற உறுப்பினா்கள் பூமா சம்மு குட்டி, தங்கம்மாள், சிங்கதுரை, முன்னாள் வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுச்சாமி, வா்த்தக அணி முத்துக்குமாா், மாணவரணி மஹ்முதா, ரமேஷ், நன்னை பாலு, யாகவா சுந்தா், வீரபாண்டி, ஆயிரப்பேரி முத்துவேல் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.