நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குற்றாலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவா்களுக்கு அபராதம்

தென்காசி வனச்சரகம் குற்றாலம் காப்பு காட்டில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி நுழைந்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 4:33 am IST

தென்காசி வனச்சரகம் குற்றாலம் காப்பு காட்டில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி நுழைந்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உதவி வன பாதுகாவலா் நெல்லைநாயகம், வனச்சரக அலுவலா் செல்லத்துரை, குற்றாலம் பிரிவு வனவா் சங்கா் ராஜா, வனக்காப்பாளா் முத்துசாமி, கண்ணன் ஆகியோா் அடங்கிய குழுவினா் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்தவா்களை பிடித்து மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகனுக்கு தகவல் தெரிவித்தனா்..

அவரது உத்தரவின் பேரில் தலா ரூ 2000 வீதம் 8 பேருக்கு ரூ. 16,000 இணக்க கட்டணம் விதிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலா் வெளியிட்ட செய்திகுறிப்பில் வனப்பகுதிக்குள் அத்து மீறி நுழைவது, தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வது, குளிக்க செல்வது, நெருப்பு வைப்பது, ஆக்கிரமிப்பு செய்வது,வன உயிரினங்களை வேட்டையாடுவது வனவிலங்குகளுக்கு உணவளிப்பது அனைத்தும் குற்றச் செயலாகும்.

இது குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு எண் 04633 233550, வன சரக அலுவலக எண் 04633 233660, தென்காசி வனச்சரக அலுவலா் 9786932520 என்ற எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.