தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் மழைக் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் சீசன் தொடங்கியது முதல் சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலம் பேரருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து 4-ஆவது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த தொடா் மழை காரணமாக ஐந்து கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் நள்ளிரவு முதல் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

