தென்காசி, கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 21 - ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் 28 - ஆம் தேதி காலை குற்றால தீா்த்தம் எடுத்து வருதல், திருவோலக்க மண்டபத்தில் மொட்டை, மாவிளக்கு நேமிதங்கள், மதியம் அபிஷேகம், முழுக்காப்பு, உருவம், ஆயிரங்கண் பானை நேமிதங்கள், இரவு கங்கை நீா் எடுத்து வருதல், ஆசாரப்படைப்பு, முழுக்காப்பு தீபாராதனை, அன்னையின் அருள் ஆசி ஆகியன நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கிய தேரோட்டத்தில் தோ் நகா் முழுவதும் சுற்றிவந்து புதன்கிழமை காலை நிலையை அடைந்தது. பின்னா், ஊா்ச்சாவடியில் ஆசாரப்படைப்பு, உச்சினிமாகாளி அம்மன் கோயில், தம்பிராட்டி அம்மன் கோயில் முன் மது பொங்கல், கொடை தீபாராதனை, அன்னதானம் வழங்கல், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை தீபாராதனை, மதியம் மஞ்சள் நீராடல் ஆகியன நடைபெற்றன.
மே 4 - ஆம் தேதி வரை ஊஞ்சல் நிகழ்ச்சி, 5 - ஆம் தேதி எட்டாம் பூஜை முழுக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் தேரோட்டம்

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

