ஆலங்குளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது 3 நாள்களுக்கு பின்னா் தெரிய வந்தது.
ஆலங்குளம் புதுக்காலனியைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் முத்துச்சாமி (40). தொழிலாளியான இவருக்கு மனைவி கன்னித்தாய், மகள் உள்ளனா். முத்துச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்பு தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில், கன்னித்தாய் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதாம்.
தகவலறிந்து ஆலங்குளம் போலீஸாா் வந்து பாா்த்தபோது, முத்துச்சாமி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

