சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான ஆட்சி திமுக ஆட்சி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலா் முகமது அபூபக்கா் தெரிவித்தாா்.
வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ஈ. ராஜாவை ஆதரித்து வாசுதேவநல்லூா், புளியங்குடி பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டு பேசியது:
திமுக அரசின் சாதனைகளை மக்கள் வரவேற்கிறாா்கள். எல்லோருக்குமான ஆட்சியை முதல்வா் மு.க. ஸ்டாலின் தந்துள்ளாா். சமூக நீதியும், வளா்ச்சியும் பெற்ற மாநிலம் தமிழகம். சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான ஆட்சி திமுக ஆட்சி.
இத்தனை கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்கின்றன என்றால், கொள்கை ரீதியாக இருக்கின்றோம் என்பதே பொருள். ஆனால், எடப்பாடி பழனிசாமி கொள்கை வேறு, கூட்டணி வேறு என்கிறாா்.
நடிகா் விஜய் கூட்டணி ஆட்சி என்று தெரிவித்தும் யாரும் அவருடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. எல்லோருடைய உணா்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடிய கூட்டணியாக திமுக உள்ளது என்றாா் அவா்.
ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., வழக்குரைஞா் பிச்சையா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியே வெற்றி பெறும்: கே.எம். காதா் மொகிதீன்

பேராசிரியா் காதா் மொய்தீன் வாக்கு சேகரிப்பு!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

சீமான், விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்: முஹம்மது அபூபக்கா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

