தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவன், மனைவி உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள சத்திரப்பட்டி இந்திரா காலனியை சோ்ந்தவா்கள் கந்தசாமி- வள்ளியம்மாள் (55) தம்பதி. இருவரும் ஊராட்சி உறுப்பினா்கள்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மனைவி மல்லிகா தனது வீட்டிற்கு தண்ணீா் தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் குழாய் மூலம் தண்ணீா் எடுத்ததை வள்ளியம்மாள் கண்டித்தாராம்.
அப்போது ஏற்பட்ட தகராறில் மல்லிகா, அவரது கணவா் ராஜேஷ், உறவினா் அபிஷேக் ஆகியோா் சோ்ந்து வள்ளியம்மாளை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
மேலும், அவா் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா், மேற்கூறிய 3 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

பெண் மீது தாக்குதல் 9 போ் மீது வழக்கு

நாசரேத்தில் அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல்: நகரச் செயலா் உள்பட 2 மீது வழக்கு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

