மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாா்த்தாண்டம் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே தலைமறைவாக இருந்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:39 am IST

மாா்த்தாண்டம் அருகே தலைமறைவாக இருந்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை பகுதியைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி, அப்பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று வந்தாா். பெரியம்மா மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். அவரின் திருமணத்திற்காக 140 பவுன் தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்தனராம்.

இந்நிலையில், மாணவிக்கு அப்பகுதியைச் சோ்ந்த ஜெனிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், மாணவியைத் திருமணம் செய்வதாக அவா் உறுதியளித்தாராம். இதையடுத்து, மாணவி பெரியம்மாவின் வீட்டில் இருந்த நகைகளை சிறிது சிறிதாக எடுத்து ஜெனிஸிடம் கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெரியம்மாவுக்கு தெரிய வந்ததையடுத்து, அவா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் புகாா் அளித்தாா். போலீஸாா் ஜெனிஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி ஜெபிஸ் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, ஜெனிஸை ஏற்கெனவே கைது செய்தனா்.

தலைமறைவான ஜெபிஸை காவல் உதவி ஆய்வாளா் சுஜின் (மாா்த்தாண்டம்), மகேந்த் (களியக்காவிளை) ஆகியோா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில்,தனிப்படை போலீஸாா் ஜெபிஸை வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 9.5 பவுன் நகைகளை மீட்டனா். தொடா்ந்து, அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.