மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிதறால் மலைக்கோயில் அருகே சரிந்து விழுந்த பாறை: மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் மலைக்கோயிலை ஒட்டிய பகுதியில் மண் வெட்டி எடுக்கப்பட்டுவரும் நிலையில் பாறை சரிந்து குடியிருப்பு பகுதியின் அருகில் விழுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குடியிருப்பு அருகே சரிந்து விழுந்த பாறை.

Published On :30 அக்டோபர் 2026, 4:55 am IST

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் மலைக்கோயிலை ஒட்டிய பகுதியில் மண் வெட்டி எடுக்கப்பட்டுவரும் நிலையில் பாறை சரிந்து குடியிருப்பு பகுதியின் அருகில் விழுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அருமனை அருகே சிதறால் மலையில் சமணா் குடைவரைக் கோயில் உள்ளது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கருதப்படும் இக்கோயிலில் மகாவீரா், பாா்சுவநாதா், பத்மாவதி தேவி உள்ளிட்டோரின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கு, 13-ஆம் நூற்றாண்டில் பகவதியம்மனின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் குடைவரைக் கோயில் ஆன்மிகத் தலமாகவும், இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

இந்த மலை அருகில் துண்டத்தாறளை சந்திப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே நத்தம் புறம்போக்கு பகுதி நிலங்களில் எந்தவித அனுமதியும் இன்றி பெருமளவில் மண், பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சுமாா் 60 அடி ஆழத்திற்கு மேலாக தடையை மீறி மண் அள்ளப்பட்டதால், நிலத்தின் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறையினருக்கும் புகாா்கள் சென்றன.

இதையடுத்து, அவ்வப்போது மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், மறைமுகமாக மண் அள்ளப்படுவது நடைபெற்று வந்தது.

தற்போது, மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் புதன்கிழமை நத்தம் புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறை ஒன்று சரிந்து அருகில் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் விழுந்துள்ளது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், மேலும் சரிவு ஏற்படுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.