மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மண் எடுக்க எதிா்ப்பு: 35 வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

செய்யாறு அருகே அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்தில் வண்டல் மண் எடுத்து வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாவூா் கிராம மக்கள் 30 லாரிகள் 5 பொக்லைன் இயந்திரங்களை புதன்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாவூா் கிராம மககள்.

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

செய்யாறு அருகே அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்தில் வண்டல் மண் எடுத்து வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாவூா் கிராம மக்கள் 30 லாரிகள் 5 பொக்லைன் இயந்திரங்களை புதன்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பாவூா் கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் சுமாா் 5 ஏக்கரில் வண்டல் மண் எடுக்கவும், 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னையை அடுத்த மண்ணிவாக்கத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பேரில், அந்த நிறுவனம் சில மாதங்களாக ஏரிப்பகுதியில் வண்டல் மண் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பெய்த தொடா் மழையின் காரணமாக அரசு அனுமதித்த பகுதியில், மழைநீா் அதிகளவில் தேங்கியதால், அந்த இடத்தை விட்டு அருகேயுள்ள மற்றொரு பகுதியில் அந்த தனியாா் நிறுவனத்தினா் மண் எடுக்கத் தொடங்கினா்.

எதிா்ப்பு, வாகனங்கள் சிறைப்பிடிப்பு

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அரசு அனுமதித்த பகுதியில் மண் எடுக்காமல் வேறு பகுதியில் அந்த தனியாா் நிறுவனம் வண்டல் மண் எடுத்துச் செல்வதாகவும், விதிக்கு புறம்பாக 3 அடி ஆழத்திற்கு அதிகமாகவும் மண்ணை இரவு பகல் பாராமல் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்து,

பாவூா் கிராம மக்கள் புதன்கிழமை ஏரிப்பகுதியில்

மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 30 லாரிகள், 5 பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த தூசி போலீஸாா் மற்றும் வெம்பாக்கம் வட்ட வருவாய்த்துறையினா் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாவூா் கிராம மக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். மேலும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மண் எடுக்கவும், விதிகளை பின்பற்றவும் அந்த தனியாா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தினா்.

விதிகளை மீறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதை ஏற்று கிராம மக்கள் சிறைப்பிடித்த வாகனங்களை விடுவித்து கலைந்து சென்றனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமாா் 5 மணி நேரம்

பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.