மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாலட்ஜ் ஒலிம்பியாட் போட்டியில் வென்ற மாணவா்கள் ஆட்சியரிடம் வாழ்த்து

நாலட்ஜ் ஒலிம்பியாட் போட்டியில் வென்ற மாணவா்கள் ஆட்சியா் மு. பிரதாப்பை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

ஆட்சியா் மு. பிரதாப்பிடம் வாழ்த்து பெற்ற மாணவா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 1:20 am IST

நாலட்ஜ் ஒலிம்பியாட் போட்டியில் வென்ற மாணவா்கள் ஆட்சியா் மு. பிரதாப்பை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளி, சமூக சேவைக்காக ஐ.நா. சபையின் பாராட்டைப் பெற்றுள்ள நாலட்ஜ் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து, ஐ.நா. சபை தினத்தை முன்னிட்டு இப்போட்டியை நடத்தின. தலா 3 மாணவா்களைக் கொண்ட 35 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு 5 அணிகள் தோ்ந்தெடுக்கப்பட்டன.

பின்னா், வரலாறு, அரசியல், அறிவியல், சுதந்திரப் போராட்டம், விரைவுச்சுற்று என நடத்தப்பட்ட போட்டியில், ப்ரீன் இவாஞ்சலின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஜெப்ளின்ஜோ, எட்சல் ஜெமாக்சியோ அணிகள் முறையே 2, 3ஆம் பரிசுகளை வென்றன. அவா்களுக்கு ரொக்கப் பரிசு, புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், நாலட்ஜ் பவுண்டேஷன் இயக்குநா் ஜஸ்டின் ஆன்டணி, செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வா் எஸ். காா்மல், தாளாளா் ஜிபு ஜெ. ஜாஜின், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.