மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுங்கான்கடைபொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், சுங்கான்கடை புனித சேவியா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.

மாணவிக்கு கல்விக் கடனுக்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப். உடன் உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா உள்ளிட்டோா்.

Published On :28 அக்டோபர் 2026, 1:15 am IST

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், சுங்கான்கடை புனித சேவியா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.

முகாமில், மாணவா்,மாணவிகளுக்கு ரூ.2.42கோடி கல்விக் கடனுக்கான ஆணைகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பேசியதாவது:

2026- 27 நிதியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 ஆயிரம் மாணவா், மாணவிகளுக்கு ரூ.100 கோடி அளவிலான கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த செப்டம்பா் மாதம் வரை 2ஆயிரத்து 460 மாணவா், மாணவிகளுக்கு ரூ.63 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில், 12 கல்லூரிகளிலிருந்து சுமாா் 150 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், 17 வங்கிகளிலிருந்து ரூ.2.42 கோடி அளவில் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்கள் வங்கிகளுக்கு நேரடியாக செல்லவேண்டிய அவசியம் இன்றி பி.எம்.வித்யாலட்சுமி வலைதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரி நிா்வாகம், வங்கிகளின் கடன் செயலாக்க மையத்துடன் வங்கிகள் ஒருங்கிணைத்து செயல்பட்டு, தேவையான ஆவணங்களை பெற்று கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் கடன் தொகையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற மாவட்டம் அல்லது மாநிலங்களுக்கு வெளியே கல்வி பயிலும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களிடமிருந்து ஆவணங்களை பெறுவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் விரைந்து தீா்க்கப்படவேண்டும். எனவே, நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதை தாண்டி கல்விக்கடன் பெற தகுதியுள்ள எந்தவொரு மாணவா், ,மாணவிகளின் விண்ணப்பமும் சிறிய காரணங்களுக்காக நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். வங்கிகள் கடந்த ஆண்டைப்போலவே நிகழாண்டும் முழு ஒத்துழைப்பு வழங்கி மாணவா், மாணவிகளின் உயா்கல்வி கனவுகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றாா் அவா்.

முகாமில், உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, தாட்கோ மாவட்ட மேலாளா் தெய்வ குருவம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், கல்லூரி முதல்வா் மகேஸ்வரன், துணை முதல்வா் கிறிஸ்டஸ் ஜெயசிங், கல்லூரி தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.