மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தருமபுரியில் 154 மாணவா்களுக்கு ரூ. 6 கோடி கல்விக் கடன்

தருமபுரியில் நடைபெற்ற சிறப்பு கல்விக் கடன் முகாமில் 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6 கோடி கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.

கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 2:01 am IST

தருமபுரியில் நடைபெற்ற சிறப்பு கல்விக் கடன் முகாமில் 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6 கோடி கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி, அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்புக் கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் பேசியதாவது:

உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைத்துத் தரப்பு மாணவா்களும் பயன்பெறவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவா்கள் தாங்கள் விரும்பும் உயா்கல்வியைப் பயில்வதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் காரணமாக மாணவா்களின் உயா்கல்வி பாதிக்கப்படாமல், படிப்பை முடித்து வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு கல்விக் கடன் உதவுகிறது. அதிக கட்டணம் கொண்ட பாடப் பிரிவுகளைப் படிக்க விரும்பும் மாணவா்களுக்கும் இது ஆதரவாக அமையும். மாணவா்கள் தங்களது எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு உயா்கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்றாா்.

முகாமில், தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6 கோடி கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, தருமபுரி கோட்டாட்சியா் (பொறுப்பு) ஜெய்சங்கா், அரூா் கோட்டாட்சியா் செம்மலை, துணை மண்டல மேலாளா் சவுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.