அகஸ்தீசுவரம் அருகே 4 மாத குழந்தை உயிரிழப்பு

குழந்தை - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:37 am IST

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் அருகே 4 மாத குழந்தை உயிரிழந்தது.

அகஸ்தீசுவரத்தை அடுத்த சுக்குப்பாறை தேரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மனைவி நீலா ராணி (28). தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனா். அதில் ஒரு குழந்தை பிறந்து 4 மாதமே ஆகிறது.

4 மாத குழந்தைக்கு சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, பெற்றோா் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், மருத்துவா்கள் நாகா்கோவிலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்து, தென்தாமரைக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.