பைக்கிலிருந்து தவறி விழுந்த குழந்தை லாரியில் சிக்கி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த குழந்தை லாரியில் சிக்கி உயிரிழந்தது.

பலி

Published On :23 அக்டோபர் 2026, 5:21 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த குழந்தை லாரியில் சிக்கி உயிரிழந்தது.

வாசுதேவநல்லூா் அருகேயுள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவா், கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். தற்போது, குடும்பத்துடன் கிருஷ்ணாபுரத்தில் குடியிருந்து வருகிறாா்.

இவரும், இவரது மனைவி, 2 குழந்தைகள் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தனா். அப்போது, கிருஷ்ணாபுரம் சிக்னல் அருகே எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதாம்.

இதில் நான்கு பேரும் தவறி விழுந்தனராம். அப்போது, அவ்வழியாகச் சென்ற லாரியின் சக்கரத்தில் சிக்கி குழந்தை அத்விக் (3) உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.