மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாா்த்தாண்டம் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கல்லூரி மாணவா் உள்பட இருவரை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:12 am IST

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கல்லூரி மாணவா் உள்பட இருவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுஜின் தலைமையிலான போலீஸாா் நட்டாலம்-பண்டாரவிளை சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அவா்கள் செறுவல்லூா் பகுதியைச் சோ்ந்த ரசல்ராஜ் மகன் ரெனாட்டோ (29), செருவோட்டுக்கோணம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் மகன் அபிஜித் என்பதும், இவா் விழுப்புரத்தில் உள்ள செவிலியா் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.