மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திற்பரப்பு அருவியில் தவறிவிட்ட வளையல் உரியவரிடம் ஒப்படைப்பு

திற்பரப்பு அருவியில் குளித்தபோது சுற்றுலாப் பயணி செவ்வாய்க்கிழமை தவறவிட்ட தங்க வளையல் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கபட்டது.

~

Published On :21 அக்டோபர் 2026, 12:52 am IST

திற்பரப்பு அருவியில் குளித்தபோது சுற்றுலாப் பயணி செவ்வாய்க்கிழமை தவறவிட்ட தங்க வளையல் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கபட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்றாம்பள்ளியைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி சங்கீதா குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தாா். இவா், அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது, அணிந்திருந்த ஒன்றரை பவுன் வளையல் நீரில் தவறிவிட்டது. அருவிப் பகுதியில் அதைத் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவா் அருவியில் காவல் பணியில் நின்றுகொண்டிருந்த காவலா் லைலாவிடம் வளையல் தவறிவிட்டதைக் கூறிவிட்டு ஊருக்குச் செல்ல ஆயத்தமானாா். அப்போது, அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்றொரு சுற்றுலாப் பயணி அந்த தங்க வளையலை கண்டெடுத்து அருவிக் காவலா் லைலாவிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, சங்கீதாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வரவழைத்து அவரிடம் வளையல் ஒப்படைக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.