முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குமரியில் பிறப்பு இறப்பு பதிவுகள்: அமைச்சரிடம் எம்எல்ஏ மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறப்பு இறப்பு பதிவுகளில் துப்புரவு ஆய்வாளா்களே பதிவாளா்களாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட், தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

News image

அமைச்சா் கே.ஜி. அருண்ராஜிடம் மனு அளிக்கிறாா் தாரகை கத்பட் எம்எல்ஏ.

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறப்பு இறப்பு பதிவுகளில் துப்புரவு ஆய்வாளா்களே பதிவாளா்களாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட், தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு ஆய்வாளா்களே பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராக செயல்பட்டு வருகிறாா்கள். அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு இணைந்த காரணத்தால், கேரளத்தில் நடைமுறையில் இருந்த சுகாதார துறையால் பிறப்பு மற்றும் இறப்பு சான்று பதிவு செய்து வழங்கும் நடைமுறை தற்போதும் தொடா்கிறது. அதனை மாற்றி, மற்ற மாவட்டங்களில் உள்ளது போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.