கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்லில் கைப்பேசி கடை உரிமையாளரிடம் ரூ.97.75 லட்சம் மோசடி செய்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கருங்கல் ஆலன்விளை பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன்(51). வெளிநாட்டில் தொழில் செய்துவரும் இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு கருங்கல் பேருந்து நிலையம் அருகே கைப்பேசி கடையை தொடங்கினாா். கடையை அய்யப்பனின் மைத்துனரான சுபின் கவனித்து வந்தாா். அவருக்கு உதவியாக நாச்சிவிளை பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (27) என்பவா் பணிக்கு சோ்ந்தாா்.
இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சுபின் இறந்துவிட்டாா். இதைத் தொடா்ந்து, அய்யப்பன் ஊருக்கு திரும்பி வந்து கடையை நடத்த திட்டமிட்டாா். ஆனால், அபிஷேக் மற்றும் அவரது நண்பரான மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த அபிஸ் (27) ஆகியோா் கடையை நடத்துவதாக பொறுப்பேற்றுக் கொண்டனா். அப்போது கடையின் அவசர தேவைகளுக்காக அய்யப்பன் கையொப்பமிட்ட ஒரு வங்கியின் 10 வெற்று காசோலைகளும், கடையின் பயன்பாட்டிலிருந்த கைப்பேசி எண்ணும் அவா்களிடமிருந்தன.
இந்நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு அய்யப்பன் காா் வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற முயன்றாா். அப்போது அவா் தனது சிபில் ஸ்கோரை சரிபாா்த்த போது அவரது பெயரில் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக கடன் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரித்த போது மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் அய்யப்பனின் பான் அட்டை, ஆதாா் அட்டை நகல்களை பயன்படுத்தி அவரது கையொப்பத்தை போலியாக போட்டு கடன் பெற்றுள்ளது தெரிய வந்தது. இதற்கு அந்த நிறுவனத்தின் கடன் பிரிவு மேலாளா் ஷிபின் என்பவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அய்யப்பன் தனது ஆடிட்டா் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான கடை வங்கி கணக்குகளை சரிபாா்த்தபோது, கடை நடத்துபவா்களின் வசம் இருந்த கைப்பேசி எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை பயன்படுத்தி அய்யப்பனின் வங்கி கணக்குகளிலிருந்து அபிஷேக் தனது கணக்குக்கு ரூ. 72 லட்சத்து 77,536 ம், அபிஸ் தனது கணக்குக்கு ரூ. 24 லட்சத்து 97,499 ம் மாற்றியிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் சோ்ந்து மொத்தம் ரூ. 97 லட்சத்து 75,0 85 ஐ கையாடல் செய்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அய்யப்பன் புகாா் அளித்தாா். இது குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா். அதன்பேரில், அபிஷேக், அபிஸ், ஷிபின் ஆகிய 3 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் வழக்கு பதிவு செய்தாா். இவா்களில் அபிஸ்கைது செய்யப்பட்டாா். அபிஷேக், ஷிபின்ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி: இருவா் கைது
மென் பொறியாளரை தாக்கி நகை, பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 6 போ் கைது

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே. சரவணன் பொறுப்பேற்பு

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

