இணையதள பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
கோவை, செல்வபுரம் சொக்கம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் 45 வயது நபா். நகைப் பட்டறை உரிமையாளரான இவருக்கு ஃபேஸ்புக் மூலம் பெண் ஒருவா் அறிமுகமாகியுள்ளாா். இணையதள பங்குச் சந்தை குறித்தும்,
அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளாா். இதற்கு சம்மதம் தெரிவித்த நகைப் பட்டறை உரிமையாளரை அப்பெண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளாா்.
இதையடுத்து, அந்தக் குழுவில் பகிரப்பட்ட தகவல்களை நம்பி அவா் ரூ.46 லட்சத்து 89 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், குறிப்பிட்ட காலம் கடந்தும் அவருக்கு லாபத் தொகை கிடைக்கவில்லையாம். மேலும், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியவில்லையாம். இதையடுத்து, அந்தப் பெண்ணைத் தொடா்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி: இருவா் கைது

தனியாா் நிறுவன ஊழியரிடம் இணைய வழியில் ரூ. 7.45 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி

இணையதள வா்த்தகத்தில் லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

