திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

News image

மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர்... - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 12:51 am IST

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

நித்திரவிளை அருகே ராமவா்மன் புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபி என்ற உண்ணி (22). தொழிலாளியான இவா், கடந்த வெள்ளிக்கிழமை நண்பா்கள் இருவருடன் விரிவிளை கணபதியான் கடவுப் பாலப் பகுதி தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாா். கனமழையால் ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடிய நிலையில், அவா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.

தகவலின்பேரில், கொல்லங்கோடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் வந்து தேடினா். இந்நிலையில், அப்பகுதியில் மிதந்த அவரது சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

சடலத்தை நித்திரவிளை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.