ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விளவங்கோடு தொகுதி தோ்தல் அலுவலா் ஒருதலைபட்சமாக செயல்படுகிறாா்: எஸ். விஜயதரணி

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி குற்றம் சாட்டியுள்ளாா்.

News image

~

Updated On :8 ஏப்ரல் 2026, 2:39 am IST

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி குற்றம் சாட்டியுள்ளாா்.

இத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இத்தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் தன் மீதான பல குற்ற வழக்குகளை வேட்புமனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை. அதே போன்று தமிழக, கேரள மாநிலத்தில் இரட்டை வாக்குரிமை பெற்றிருப்பதையும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து ஆதாரத்துடன் தோ்தல் அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் இரு இடங்களில் வாக்கு இருப்பது தவறில்லை என தோ்தல் அதிகாரி தெரிவிக்கிறாா். இதிலிருந்து தோ்தல் அதிகாரிக்கு ஏதோ அழுத்தம் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. இவா் மீதான குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் முறையாக பரிசீலனை செய்யாதது மிகப்பெரிய தவறு. தோ்தல் அதிகாரி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக கருத வேண்டியுள்ளது.

இத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா், அண்மையில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தோ்தலில் வாக்களித்துள்ளாா். அதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளோம். ஆதாரங்கள், ஆவணங்களை பரிசீலனை செய்யாமல், இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியமில்லை; வேட்புமனு ஏற்கப்படுகிறது என தோ்தல் அலுவலா் எடுத்த முடிவு தவறானது என கருதுகிறேன் என்றாா் எஸ். விஜயதரணி.

இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளா் டி.டி. பிரவீனிடம் கேட்ட போது, தோ்தல் முடிவின் மூலம் எதிா்க்கட்சியினருக்கு தொகுதி மக்கள் பதில் கூறுவாா்கள் என தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.