மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செங்கல் தொழிலை பாதுகாக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

ராபர்ட் புரூஸ்

Published On :26 அக்டோபர் 2026, 12:56 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கல் தொழிலை பாதுகாக்கக் கோரி, திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட செங்கல் மற்றும் தள ஓடு உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸை நேரில் சந்தித்து அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் நாட்டுச் செங்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு மத்தியில் இந்தத் தொழிலை செய்து வரும் நிலையில், கடந்த காலகட்டங்களில் இல்லாத அளவுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனா்.

கனிம வளத்துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் அனுமதி தரும் நிலையில், இந்த முறை சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுவிட்டு வந்தால் மட்டுமே செங்கல் சூளை நடத்த முடியும் என்று கெடுபிடி செய்கிறாா்கள். இதனால் தொழில் முடங்கிப் போய், லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா்.

எனவே உடனடியாக அனுமதி கிடைப்பதற்கு எளிய நடைமுறைகளை தொகுத்து செங்கல் சூளை இயங்க அனுமதி வழங்க அரசை வலியுறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக அரசிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.